உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரதமர் பாதுகாப்பு பணிக்கு செல்லாத ஏட்டு, எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

பிரதமர் பாதுகாப்பு பணிக்கு செல்லாத ஏட்டு, எஸ்.எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

ஈரோடு, பிரதமர் பாதுகாப்புக்கு பணிக்கு செல்லாத, எஸ்.எஸ்.ஐ. மற்றும் ஏட்டு ஆகியோர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீசார் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பவானி போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., சந்திரசேகர், அந்தியூர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சார்லஸ் ஆகியோர் கடந்த, 17ல் கோவையில் பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரி முன் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், ஒருவர் கோவையில் காரில் சீருடையுடன் சுய நினைவு இழந்த நிலையிலும், மற்றொருவர் சுய நினைவு இழந்த நிலையில் சாலையிலும் கிடந்துள்ளனர். இதை மொபைல் போனில் படம் எடுத்த பொதுமக்கள், போலீஸ் தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. இதையடுத்து இருவரையும், ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படைக்கு மாற்றி, ஈரோடு மாவட்ட எஸ்.பி., சுஜாதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை