உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி தீர்மானத்துக்கு ஜி.ஓ., கேட்டு ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி தீர்மானத்துக்கு ஜி.ஓ., கேட்டு ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலர் பாரதி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆர்ப்பாட்டம் செய்து, கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்-கினர். மனு விபரம்: கோவை, திருச்சி, கரூர் மாநகராட்சிகளை-விட, ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி அதிகம் விதித்துள்-ளனர். ஜவுளி, தோல் உள்ளிட்ட தொழில் நசிந்ததால், வரி செலுத்த முடியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஜப்தி, குடிநீர் குழாய் துண்டிப்பு, வீட்டு வாசலை இடித்தல், வீட்டு முன் குப்பை தொட்டி வைத்தல் போன்ற கெடுபிடி வசூலில் ஈடுபடுகி-றது. மாநகராட்சியில் கடந்த மார்ச், 12ல் நடந்த கூட்டத்தில் சொத்து வரி அடிப்படை கட்டணத்தை பாதியாக குறைக்க கோரியும், ஆண்டுக்கு, 6 சதவீத வரி உயர்வை, 5 ஆண்டுக்கு ஒரு முறை வரி உயர்வு, வரி சீராய்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர். இதற்கான அரசாணையை அரசு வழங்கி, வரி குறைப்பை அமலாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி-வித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்