உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

ஈரோடு: ஈரோடு, ப.செ.பார்க் தகைசால் பள்ளியில், அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும், 11 பள்ளிகளை சேர்ந்த, 2,124 மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி சைக்கிள் வழங்கி கூறியதாவது: மாணவிகள் உயர் கல்வி பயில புதுமை பெண் திட்டமும், மாண-வர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டமும், துவக்க பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்டமும் அரசால் நடை-முறைக்கு வந்துள்ளது. ஈரோடு சி.என்.கல்லுாரி விரைவில் அரசு கல்லுாரியாக மாறும். ஜனாதிபதி ஒப்புதலுக்காக கோப்பு வைக்-கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலு-வலர் தர்மராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் கபீர், பெல்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை