உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராகி விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

ராகி விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

அந்தியூர்;வேளாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், ராகி கொள்முதல் தொடர்பான விவசாயிகள் முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம், பர்கூர்மலையில் நடந்தது. ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் தலைமை வகித்தார். பர்கூர் மலையில் கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு குவிண்டாலுக்கு, 4,888 ரூபாய் வழங்கப்படும். அதற்கான தொகையை மூன்று நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பர்கூர் கிராமத்தில் மூன்று இடங்களில் கூடுதலாக ராகி கொள்முதல் நிலையம் அமைக்க உறுதி அளித்தனர். கூட்டத்தில் பர்கூர் ஊராட்சியை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் லோகநாதன், வேளாண்மை துணை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை