உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயணி உயிரை காப்பாற்றிய ரயில்வே துணை மேலாளர்

பயணி உயிரை காப்பாற்றிய ரயில்வே துணை மேலாளர்

ஈரோடு, எர்ணாகுளம்-பெங்களூரு இடையிலான இன்டர்சிட்டி ரயில் நேற்று முன்தினம் மதியம், 2:25 மணிக்கு ஈரோடு நின்றது. புறப்பட்டு மெதுவாக நகர தொடங்கியபோது, ஆண் பயணி ஒருவர் ஏற வந்து முற்பட்டார். அதேசமயம் ரயில் வேகமெடுத்ததால், பெட்டியில் ஏற முடியாமல் கால் இடறி, படிகக்ட்டில் இருந்து பிளாட்பார்ம் இடையே சிக்கி, சில அடி துாரம் தொங்கியபடி சென்றார். இதைப்பார்த்த பயணிகள் கூச்சலிட, ரயில்வே ஸ்டேஷன் துணை மேலாளர் கார்த்திகேயன் துரிதமாக செயல்பட்டு, பயணியை பிடித்து இழுத்து பிளாட்பார்மில் தள்ளி உயிரை காப்பாற்றினார். பயணி உயிரை காப்பாற்றிய கார்த்திகேயனை, சக ரயில்வே அதிகாரிகள், போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை