உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சென்னிமலை: சென்னிமலை அருகே சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி இறந்தார்.சென்னிமலை அடுத்துள்ள மைலாடி, ஞானிபாளையம் பகுதியில் வசிப்பவர் நாராயணன், 86, இவர் ஸ்ரீ வில்லிப்புத்துாரை சேர்ந்-தவர். இவர் சென்னிமலை அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் பணி-யாற்றும் மதியழகன் என்பவரை தனது டி.வி.எஸ்., 50 மொபட்டில் ஏற்றி கொண்டு, ஈரோடு சாலையில் சென்று கொண்-டிருந்தார். அப்போது பால் வாங்க சாலையை கடந்துள்ளார்.அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி செல்லும் வழியில் நாராயணன் இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை