உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக கலக்கும் கழிவுநீர்

காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக கலக்கும் கழிவுநீர்

ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பவானி ஆறு வழியாக பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டை அடைகிறது. அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் அக்ரஹாரம், வெண்டிபாளையம், கருமாண்டாம்பாளையம், பணப்பாளையம் என, 74 கி.மீ., துாரம் பயணித்து கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. காலிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் அருகில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில், அரசிளங்கா வீதி பகுதியின் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: மாநகராட்சி, 40வது வார்டு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தி தோட்டம், அரசிளங்கா வீதி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. வீடுகளின் கழிவுநீர் சாக்கடைக்கு செல்கிறது. ஆனால் சாக்கடை பாதாள சாக்கடையுடன் இணைக்கவில்லை. இதனால் காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை