உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீசாய் சிந்து அறக்கட்டளை ரூ.1 லட்சம் நன்கொடை

ஸ்ரீசாய் சிந்து அறக்கட்டளை ரூ.1 லட்சம் நன்கொடை

ஈரோடு, பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா, பரப்புரை தொடர் பயணம் கோபியில் நடந்தது. இதில் திருச்சி மாவட்டம் சிறுகானுரில் பெரியார் சிலை அமைக்க, ஸ்ரீசாய் சிந்து அறக்கட்டளை ஈரோடு சட்டக்கல்லுாரி சார்பில் ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையை, திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம், சட்டக்கல்லுாரி தலைவரும், தி.மு.க., மாநில நெசவாளரணி செயலாளருமான சிந்து ரவிச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சென்னியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்றார். விழாவில் கழக நிர்வாகிகள், மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி