| ADDED : டிச 26, 2025 05:14 AM
பவானி: ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி, மாக்கல்புதுாரை சேர்ந்தவர் சண்முகம், 39; விவசாய கூலி தொழிலாளி. இவரின் மனைவி ஜெயந்தி, 33; தம்பதிக்கு, 11 வயதில் மகன் உள்ளார். கணவர் மீது ஓராண்டாக ஜெயந்திக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கணவன் செல்போனை, ஜெயந்தி வாங்கி-யுள்ளார். இன்ஸ்டாகிராமில் வீடியோ பார்த்து விட்டு, கணவ-ருடன் சண்டை போட்டுவிட்டு, அறைக்குள் சென்று கதவினை தாழிட்டுக் கொண்டுள்ளார். வழக்கமான தகராறு தானே என நினைத்து, மகனுடன் சண்முகம் துாங்க சென்று விட்டார். நேற்ற அதிகாலை அறைக்கதவை சண்முகம் தட்டியும் நீண்ட நேரமாக கதவு திறக்காததால், உள்பக்க தாழ்ப்பாழை கம்பியால் திறந்து, உள்ளே சென்று பார்த்தனர். துப்பட்டாவில் துாக்கிட்ட நிலையில் ஜெயந்தி தொங்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.