உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு

தமிழ் வளர்ச்சி துறை பயிலரங்கம் நிறைவு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில்,'' குழந்தைகள் தாய் மொழியில்தான் கற்க வேண்டும் என்கின்றனர். எந்த மொழியில் நம்மால் சிந்திக்க இயல்கிறதோ, அதுவே தாய்மொழி. தமிழ் இலக்கணம், 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தமிழ் மொழியை நாம் அனைவரும் கற்று, சிறப்பாக கையாள வேண்டும்,'' என்றார்.முனைவர் விஸ்வநாதன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ஜோதி, முனைவர் குணசீலன், முனைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பயிற்சி வழங்கினர்.பயிற்சியில் பங்கேற்ற, 80க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை