உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் தமிழ் வாழுது

மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் தமிழ் வாழுது

ஈரோடு: தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், தமிழ் மொழியையே பெரும்பாலும் நடைமுறையிலும், பயன்படுத்தவும் அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் பல அரசு அலுவலகங்களில் தமிழில்தான் அனைத்தும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில், மாநகராட்சி வைத்துள்ள சிறிய அளவிலான பெயர் பலகையில், தமிழ் தள்ளாடுகிறது. அதாவது 'பத்திரிகையாளர்கள்' என குறிப்பிடுவதற்கு 'பத்திரிககையாளர்கள்' என ஒரு 'க'வை கூடுதலாக போட்டு அசத்தியுள்ளனர். இதைப்படிக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழுத்துப்பிழையை கூட கவனிக்காமல், எப்படி பெயர் பலகை பொருத்தினர்? என்று முனகியபடி செல்கின்றனர். தமிழ் வாழ்க என்று பிரமாண்டமாக, கட்டடத்திலோ, முகப்பிலோ பெயர் பலகை வைத்தால் போதாது. தமிழை பிழையின்றி எழுதுவதும், குறிப்பிடுவதும் மிக முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை