உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், அப்பன் நகரை சேர்ந்தவர் தினேஷ், 31; தனியார் வங்கி ஊழியர். இவரை கத்தி முனையில் மிரட்டிய நான்கு பேர், 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இது தொர்டபாக சூரம்பட்டி, நால்ரோடு பெரியார் நகர் விக்னேஷ் குமார், 26; ஈரோடு, ஸ்டோனி பிரிட்ஜ் பிரவீன் குமார், 26; கள்ளுக்கடைமேடு, ஈ.வி.ஆர்.வீதி தீபன், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மரப்பாலம், நேதாஜி சாலை விக்ரமை தேடி வருகின்றனர். கைதான மூவர் மீதும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ