உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நள்ளிரவில் டூவீலரில் மணல் கடத்திய மூன்று பேர் கைது

நள்ளிரவில் டூவீலரில் மணல் கடத்திய மூன்று பேர் கைது

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே நள்ளிரவில், டூவீலரில் மணல் கடத்திய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் பெரும்பள்ளம் அணை பகுதியில் இருந்து மணல் கடத்துவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு பங்களாபுதுார் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். பெரும்பள்ளம் அணை அருகே மூன்று பேர் டூவீலர்களில் மூட்டைக-ளுடன் வந்தனர். மூவரையும் நிறுத்தி சோதனை செய்ததில், கே.என்.பாளையம் ஐயப்பன், 46; சம்-பத்குமார், 48; ரங்கநாதன், 48, என தெரிந்தது. சாக்கில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. மூவரின் டூவீலர்கள், 12 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை