உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூங்கில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மூங்கில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே, சாலையோரமிருந்த மூங்கில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சத்தியமங்கலம் அடுத்த ஆசனுார் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஆசனுார் அருகே மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், சீவக்காபள்ளம் என்ற இடத்தில் சாலை குறுக்கே மூங்கில் மரம் நேற்று மாலை 4:20க்கு முறிந்து விழுந்தது. இதனால் இரு புறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.தீயணைப்புதுறையினர், வனத்துறையினர் இணைந்து மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்ததால், பணியில் சுணக்கம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு மூங்கில் முழுவதும் வெட்டி அப்புறப்படுத்திய பின்பு படிப்படியாக போக்குவரத்து சீரானது. மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை