உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்காதது வருத்தமாக உள்ளது

பொங்கல் தொகுப்பில் மண் பானை வழங்காதது வருத்தமாக உள்ளது

கோபி : ''பொங்கல் தொகுப்பில், மண்பானை வழங்காதது வருத்தமளிக்கிறது,'' என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார். கொ.ம.தே.கட்சியின், ஈரோடு மேற்கு மாவட்ட பொதுக்குழு, பெருஞ்சலங்கை ஆட்டம் அரங்கேற்ற விழா கோபியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:பல மாவட்டங்கள் சிறிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரிய மாவட்டமாக உள்ள ஈரோட்டை பிரிக்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது. எனவே தாமதப்படுத்தாமல், கோபியை தலைநகராக கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.ஈரோட்டில் இருந்து கோபி வரை, நான்கு வழிச்சாலை திட்டம் அமைத்தாலும், கோபி டவுனுக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச்சாலை இன்னும் அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைத்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். கொப்பரை தேங்காய் கொள்முதலில், விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.கவுந்தப்பாடியில் இருந்து, பழநி கோவில் நிர்வாகம் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்வதால், விவசாயிகள் உரிய பயன் அடைவதில்லை. அதை வியாபாரிகள் பயன்படுத்தி கொள்கின்றனர். அதற்கென உள்ள சங்கம் மூலம் கோவில் நிர்வாகம், நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், நாங்கள் தற்போதுள்ள கூட்டணி, வலுவாக தொடர்கிறது. நான்கு வழிச்சாலை பகுதியில், சுங்கச்சாவடி தேவையா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு வழங்கியது மகிழ்ச்சி. ஆனால் விவசாயிகளை வாழ வைக்க, பொங்கல் சமயத்தில் நாட்டு சர்க்கரை, கருப்பட்டியும் வழங்கினால், சிறு விவசாயிகள் பயனடைவர். அதேபோல் பொங்கல் தொகுப்பில், மண்பானை வழங்க வேண்டும். அத்தொழில் சிறக்க, பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும், மண்பானை வழங்க வேண்டும். மண்பானை வழங்காதது வருத்தமாக உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை