உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வைகாசி கடைசி முகூர்த்தம்: கோவிலில் 18 ஜோடிக்கு திருமணம்

வைகாசி கடைசி முகூர்த்தம்: கோவிலில் 18 ஜோடிக்கு திருமணம்

கோபி: வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால், கோபி கோவில்களில் நேற்று, 18 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 முதல், 7:00 மணி வரை ஆறு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதேபோல், பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 முதல், 7:00 மணி வரை, பத்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. தவிர, பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 முதல், 7:00 மணிக்குள் இரு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ