உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.இ.டி., கல்லுாரியில் கிரீன் ஹட் தொடக்க முகாம்

வி.இ.டி., கல்லுாரியில் கிரீன் ஹட் தொடக்க முகாம்

ஈரோடு: ஈரோடு வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரி, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ஸ்டார்ட் அப் கலாசார நிறுவனம், எஸ்.டி.எஸ்.என்., யூத், அன்லீஸ் கம்யூனிட்டி இணைந்து செயல்படுத்தும் டிரான்ஸ்பார்ம் ஈரோடு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, வி.இ.டி., கலை கல்லுாரியில், கிரீன்ஹட் தொடக்க முகாமை நடத்தியது. தற்போதைய பொருளாதார சூழலில் புது தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் நடந்த நிகழ்வில் கல்லுாரி செயலர் சந்திரசேகர் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி வரவேற்றார். ஈரோடு மாவட்ட உதவி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி சிறப்புரை ஆற்றினார். தமிழக அரசின் தொழில்துறை மற்றும் வணிகவியல் துறை தொழில்நுட்ப துணை இயக்குனர் திருமுருகன் சிறப்புரை ஆற்றினார். ஸ்டார்ட் அப் டி.என்., செயல்திட்ட இணை அலுவலர் கோபிநாத், விளக்கவுரை அளித்தார். ஸ்டார்ட் அப் கல்சர் நிறுவன இணை நிறுவனர் சிவராகவி தொடக்க முகாம் குறித்து உரை நிகழ்த்தினார். இதையொட்டி மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலிடத்தை வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, இரண்டாமிடத்தை கொங்கு கலை கல்லுாரி, மூன்றாமிடத்தை வி.இ.டி., கலை அறிவியல் கல்லுாரி பெற்றது. கல்லுாரிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை