உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்

கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, நேற்று நேர்காணல் நடந்தது. கடந்த, 2022 ஏப்.,ல், நான்கு நாட்கள் நேர்காணல் நடப்பதாக அறிவித்தனர். இரு நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் நிறுத்தி வைத்தனர். மீதி விண்ணப்பதாரர்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல்படி, ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நேர்காணல் துவங்கியது.இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது: கால்நடை உதவியாளர் காலிப்பணி இடங்களை நிரப்ப, 2022ல், 2 நாட்கள் நடந்த நேர்காணலில், 50 சதவீதம் பேர் பங்கேற்றனர். மீதி, 2,125 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. சிலர் முகவரி மாற்றம் செய்திருப்பதால், அழைப்பு கடிதம் திரும்ப வந்தது. அழைப்பு கடிதம் உள்ளவர்கள் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாளையும் (இன்று) நேர்காணல் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை