உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்காளர்களுக்கு பட்டுவாடா மாவட்டத்தில் 24 புகார் பதிவு

வாக்காளர்களுக்கு பட்டுவாடா மாவட்டத்தில் 24 புகார் பதிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, 119 புகாரும், சி-விஜில் செயலி மூலம், 52 புகார் என, 171 புகார் வந்துள்ளது. கடந்த இரண்டு நாளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அதிகமாக புகார் வந்தது.ஈரோடு மணல்மேடு, பழையபாளையம் உட்பட மாவட்டம் முழுவதிலும், 24 புகார் வந்தது. . இந்த புகார்களின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து, விதிமீறல், போலீஸ் துறை விசாரணை என நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, 53 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி