உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5,090 மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு பயிற்சி

5,090 மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு பயிற்சி

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்த பகுதிகளில், பல்வேறு துறை அதிகாரிகள், பொது அமைப்பினர் வீடுவீடாக சென்று ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முதன் முறையாக ஓட்டு போடும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஓட்டுப்பதிவு செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட அளவில் நடந்தது.ஈரோடு சி.என்.கல்லுாரி உட்பட, 30 கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாதிரி ஓட்டுப்பதிவு மையம் ஏற்படுத்தி, மாதிரி ஓட்டுப்பதிவு செய்ய வைத்தனர். இதில், 5,090 மாணவ, மாணவியர் ஓட்டுப்பதிவு செய்தனர். லோக்சபா தேர்தலில் தவறாமல் ஓட்டுப்பதிவு செய்வதென்று உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை