மேலும் செய்திகள்
அதிவேக கார் மோதி கூலி தொழிலாளி பலி
26-Oct-2025
கேடில் முடிந்த கூடா நட்பு
26-Oct-2025
மாவட்ட கூடைப்பந்து: தாராபுரம் பள்ளி வெற்றி
26-Oct-2025
உள்ளூர் வர்த்தக செய்திகள்
26-Oct-2025
திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள்
26-Oct-2025
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 52வது வார்டுக்கு உட்பட்ட பொய்யேரிக்கரை வீதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி குடிநீர் குழாய்களில் கரும் நிறத்தில், துர்நாற்றத்துடன், சாக்கடை கழிவுநீர் வந்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஒரு வாரத்துக்கு முன் இப்பகுதியில், குடிநீர் குழாய்களை சரி செய்ய, மாநகராட்சி ஊழியர்கள் குழி தோண்டினர். அதன் அருகிலேயே கழிவு நீர் கால்வாய் செல்வதால், அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீர் குழாயில் வருகிறது. கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினர்.இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சாந்தி கூறியதாவது: குடிநீர் குழாயில் சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. குழாயை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர். குடிநீர் ஆப்பரேட்டர்களிடம் தெரிவித்துள்ளேன். உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025
26-Oct-2025