உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சின்டெக்ஸ் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

சின்டெக்ஸ் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

ஈரோடு: தமிழக அளவில் கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால், வாந்தி, பேதி ஏற்பட்டு, 20 நாட்களில், ஒன்பது பேர் பலியாகினர். அதிகாரிகள் ஆய்வில், 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததுமே காரணம் என தெரிந்தது. இதன் எதிரொலியாக ஈரோடு மாநகராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சின்டெக்ஸ் தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. இதன்படி இதுவரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 64 மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 220 சின்டெக்ஸ் தொட்டிகள் துாய்மை செய்யப்பட்டது. மேலும், 660 சின்டெக்ஸ் தொட்டிகளை துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருவதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை