உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல விளையாட்டு ஈரோட்டில் துவக்கம்

மண்டல விளையாட்டு ஈரோட்டில் துவக்கம்

ஈரோடு:கோவை மண்டல அளவிலான விளையாட்டு போட்டி, ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், தொடங்கியது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். இதில், 12 அரசு மற்றும் 32 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என, 44 தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். கைப்பந்து, கால்பந்து, இறகுபந்து, 100 மீ., 200 மீ., 400 மீ., மற்றும் 800 மீ., 1,200 மீ., ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை