உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல அளவிலான விளையாட்டு தீயணைப்பு நிலைய வீரர் உற்சாகம்

மண்டல அளவிலான விளையாட்டு தீயணைப்பு நிலைய வீரர் உற்சாகம்

ஈரோடு: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், மண்டல அளவிலான விளை-யாட்டு போட்டி, ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நேற்று துவங்கியது.ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார் வர-வேற்றார். சேலம் மண்டலம் துணை இயக்குனர் கல்யாணகுமார் போட்டியை துவங்கி வைத்தார்.போட்டி இன்று நிறைவு பெறுகிறது. மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.நேற்று தீயணைப்பு துறை சார்ந்த திறனறி போட்-டிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்-தயம், நீச்சல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள், வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன் உள்பட, 35க்கும் மேற்பட்ட போட்டிகளில், வீரர்கள் உற்சா-கமாக பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை