உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

திருக்கோவிலூர், : மணலூர்பேட்டை அருகே எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணலூர்பேட்டை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சேகர், 50; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். கடந்த 23ம் தேதி வயலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றவர், எலி பேஸ்ட் சாப்பிட்டு வயலில் மயங்கி கிடந்தார். உடன் அவரை மீட்டு திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி