உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் அருகே தகராறில் விவசாயியை வெட்டி கொலை செய்த ஆசாமி கைது

சங்கராபுரம் அருகே தகராறில் விவசாயியை வெட்டி கொலை செய்த ஆசாமி கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சிறிய தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டி கொலை செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சண்முகம் 52. விவசாயி.இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் கோபால் மகன் இளையராஜா, 40; நேற்று மாலை 6.00 மணி அளவில் இளையராஜா வீட்டு வாசலில் உள்ள இச்சிலி மரத்தில் சிறுவர்கள் பழம் பறித்தனர்.இதைகண்ட இளையராஜா பழம்பறித்த சிறுவர்களை திட்டி விரட்டியடித்துள்ளார். இதை பார்த்த சண்முகம் ஏன் சிறுவர்களை திட்டுகிறாய் என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார்.இதில் அவர்கள் இருவருக்கும் வாய்தகறாறு ஏற்பட்டுள்ளது.இதில் சண்முகம் இளையராஜாவை கையால் தாக்கியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த இளையராஜா கத்தியால் சண்முகத்தின் பின் மண்டையில் வெட்டியுள்ளார்.தலையில் பலத்த காயமடைந்த சண்முகத்தை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சண்முகம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்த சண்முகத்திற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் இளையராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை