உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு

கொலை மிரட்டல் தம்பதி மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குடிபோதையில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராகுல். குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் மது குடித்து விட்டு தெருவில் ஆபாசமாக பேசுவது வழக்கம். சம்பவத்தன்று குடித்து விட்டு ஆபாசமாக பேசியுள்ளார்.இதனை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 41; கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த ராகுல் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சேர்ந்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் ராகுல், லட்சுமி ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை