உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அனுமதியின்றி பேனர் இரண்டு பேர் மீது வழக்கு  

அனுமதியின்றி பேனர் இரண்டு பேர் மீது வழக்கு  

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் நகர பகுதியில் சிறுவன் மீது பேனர் விழுந்தது தொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சின்னசேலம் நகர பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்தனர். சின்னசேலம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பலத்த காற்று வீசிய நிலையில், சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுவன் மீது பேனர் விழுந்தது. உடன் அப்பகுதியில் இருந்தவர்கள் விழுந்த பேனரை அகற்றி, சிறுவனை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைத்ததாக ராவுத்தர் மகன் அக்பர், கஜாபாய் மகன் தாவுத் ஆகிய இருவர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை