மேலும் செய்திகள்
பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா
22 hour(s) ago
பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் கைது
22 hour(s) ago
கார் டிரைவர் தற்கொலை
22 hour(s) ago
பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
22 hour(s) ago
திருக்கோவிலுார்: ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி சார்பில் ஐந்து முனை சந்திப்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் ஐந்து முனை சந்திப்பில் திருக்கோவிலூர் போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சத்யன் முன்னிலை வகித்தார். இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, இலவசமாக 10 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களின் முகப்பு விளக்கில் சிறிய அளவிலான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாசனத் தலைவர் வாசன், செயலாளர் கோதம்சந்த், பொருளாளர் சௌந்தர்ராஜன், உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, கல்யாண குமார், ராஜேஷ், சிதம்பரநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago