உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டல் உரிமையாளரை தாக்கி பைக் பறிப்பு: 3 பேருக்கு வலை

ஓட்டல் உரிமையாளரை தாக்கி பைக் பறிப்பு: 3 பேருக்கு வலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி பைக்கை பறித்து சென்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தை சேர்ந்தவர் செல்லபாபு மகன் பாலாஜி, 36; இவர், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பிரியாணி கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு, கடலுார் மாவட்டம், நெய்வேலி, மந்தாராக்குப்பத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கவுதம், உளுந்துார்பேட்டை அஜிஸ் நகர் தேவா உட்பட 3 பேர் பிரியாணி பார்சல்கேட்டுள்ளனர். பிரியாணி பார்சல் கட்டிக் கொண்டிருந்தபோது, கடைக்கு வெளியே மூன்றும் பேரும் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதுகுறித்து கேட்ட ஓட்டல் உரிமையாளர் பாலாஜிக்கும், மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ததை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, கடையை மூடிவிட்டு பாலாஜி வீட்டிற்கு சென்றபோது, கோர்ட் அருகே அவரை மூன்று பேரும் வழிமறித்து தாக்கி விட்டு, அவரது பைக்கை பறித்து சென்றனர்.இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து கவுதம், தேவா உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை