| ADDED : ஜூலை 20, 2024 05:57 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தகைசால் திட்டத்தின் கீழ் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் அமைத்தல், கழிவறை, நுாலகம் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.இ.ஓ., முருகன் குத்துவிளக்கேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி, துணைத் தலைவர் அப்துல் கலீல், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மணிமொழி, தலைமை ஆசிரியர் கீதா, உதவி தலைமை ஆசிரியர்கள் கற்பகம், வசந்தா, காவலர் வீட்டு வசதி கழக உதவி பொறியாளர் பூங்குழலி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.