உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தபோவனத்தில் இன்று மகா கும்பாபிஷேகம்

தபோவனத்தில் இன்று மகா கும்பாபிஷேகம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா தபோவனத்தில் இன்று மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.திருக்கோவிலுார் அடுத்த தபோவனத்தில், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் உள்ளது. இங்குள்ள மணிமண்டபம், மூர்த்திகள் சன்னிதி, ராஜகோபுரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு இன்று காலை 7:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.முன்னதாக நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை, விசேஷ மூலமந்திர ஹோம திரவியாகுதி, நவாவரண பூஜை, பூர்ணாகுதி நடந்தது. மாலை 5:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜை நடந்தது.இன்று 16ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, நவாவரண பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி 7:00 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகளின் மூலக்கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ