உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கள்ளக்குறிச்சி: மேலுாரில் கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் கிராமத்தில் அர்ஜூனன் என்பவரது விளைநில கிணற்றில் புள்ளி மான் விழுந்ததாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை 10:00 மணியளவில் தகவல் கிடைத்தது.அதன்பேரில், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சக்திவேல் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்த 2 வயது ஆண் மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.வனத்துறை அலுவலர் செல்வசேகரன் புள்ளி மானை சிகிச்சைக்காக இந்திலி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும், வாணவரெட்டி காப்புக்காட்டில் மான் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி