| ADDED : மார் 25, 2024 05:58 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் முதல் கட்ட சுழற்சி பணி நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்துார்பேட்டை 77, ரிஷிவந்தியம் 78, சங்கராபுரம் 79, கள்ளக்குறிச்சி (தனி) 80 ஆகிய சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக கணினி முறையில் முதல் சுழற்சி செய்யும் பணி நடந்தது.தொடர்ந்து 4 சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பிட, தச்சூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2,732, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,633, விவிபாட் இயந்திரங்கள் 1,762 ஆகியவைகள் கணினி முறையில் முதல் சுழற்சிக்குள்ளாக்கப்பட்டன.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ் (பொது), சங்கர் (தேர்தல்), மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.