| ADDED : மார் 19, 2024 10:38 PM
கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி வங்கிகளின் கேஷ் டிபாசிட் இயந்திரம், ஏ.டி.எம்.,மையங்கள் 24 மணி நேரமும் முறையாக இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;லோக்சபா தேர்தலையொட்டி தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடைபடிக்கப்பட்டு வருகிறது. இதில் தனிபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே எடுத்து செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் வணிகர்கள், பொதுமக்கள் தங்களுடைய அவசர தேவைகளுக்கு வங்கிகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகள் தங்களுடைய பணம் டெபாசிட் மிஷன்(பணம் போடும் இயந்திரம்) மற்றும் ஏ.டி.எம்.,களை சரிவர பராமரிப்பது கிடையாது. எனவே, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிககள் பணம் டெபாசிட் மிஷன்கள், ஏ.டி.எம்., மிஷன்கள் தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இயங்கும் பட்சத்தில் வணிகர்கள், பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.