| ADDED : ஜன 14, 2024 05:04 AM
தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே பைக் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த செந்தில், 37; இவர் கடந்த 8ம் தேதி இரவு 11:00 மணிக்கு ஹீரோ சூப்பர் பைக்கை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சியை சேர்ந்த செந்தில்குமார் மகன் ரூபேஷ் குமார்: 21, மலைக்கோட்டாலம் கிருஷ்ணமூர்த்தி மகன் அர்ஜூனன், 23; பைக்கை திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.