உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

 சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர். மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் முருகன், 21; இவர், கடந்த ஜனவரி 26ம் தேதி 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த முருகன், அவரது தாய் ஜோதி, சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை