உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது விற்பனை 6 பேர் மீது வழக்குப் பதிவு

மது விற்பனை 6 பேர் மீது வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் மது விற்பனை தொடர்பாக ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து சென்றனர். மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்பவர்கள், பொது இடத்தில் மது அருந்துபவர்கள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கச்சிராயபாளையம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற சீராளன் மகன் மனோகரன், சோலைமுத்து மகன் செல்வம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்த தலா 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், கல்வராயன்மலை நாதம்பள்ளி தெற்கு ஓடை அருகே, 400 லிட்., சாராய ஊரல் வைத்திருந்தது தொடர்பாக, ஆண்டி மகன் அண்ணாமலை மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி