உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  காங்., ஆலோசனை கூட்டம்

 காங்., ஆலோசனை கூட்டம்

திருக்கோவிலுார்: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., மாவட்ட தலைவர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூரில் நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., மாவட்டத் தலைவர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் திருக்கோவிலுார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திருக்கோவிலுார் தொகுதி பொறுப்பாளர் வாசிம் ராஜா முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டியின் தேர்தல் பார்வையாளரான டாக்டர் வெங்கெட் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் விரைவில் விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கான புதிய மாவட்ட தலைவர் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். மாநிலத் துணைத் தலைவர் ராமசுகந்தன், அரகண்டநல்லுார் மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை