| ADDED : நவ 18, 2025 07:31 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மளிகைக் கடையில், குடிபோதையில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த பு துபட்டைச் சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி தேவி, 36: மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சிவா 44; பிரகாஷ், 25; சவுந்தர், 39; ஜெகதீசன், 31; மற்றும் பெயர் தெரியாத 6 பேர் மளிகை கடைக்கு வந்து தகராறு செய்து, பொருட்களை சேதப்படுத்தி, தேவியை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து சிவா, பிரகாஷ், சவுந்தர், ஜெகதீசன் ஆகிய 4 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.