உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

 திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திறன்மேம்பாட்டு பயிற்சி முடித்த 31 கைவினை திட்ட பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சார்பில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் விருக்க்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில், கலைஞர் கைவினை திட்டம் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவோருக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் சார்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 23 மர சிற்ப கைவினை கலைஞர்கள், 8 தையல் கலைஞர்கள் என மொத்தம் 31 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்த கைவினை திட்ட பயனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் சான்றிதழ் வழங்கினார். திறன் மேம்பாட்டு பயிற்சி பயிற்றுநர் செந்தில் வரவேற்றார். சிற்பி சக்திவேல் மற்றும் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை