உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வெளி மாநில வாகனங்களை தடுக்க கலெக்டரிடம் மனு

 வெளி மாநில வாகனங்களை தடுக்க கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி: வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் சவாரி செல்வதை தடுக்க வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தொழிற்சங்கத்தினர் அளித்த மனுவில்; மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில பதிவு எண் கொண்ட 300 சுற்றுலா வாகனங்கள் உள்ளது. இந்த வாகன உரிமையாளர்கள் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்து, அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சபரிமலை மற்றும் மேல்மருவத்துாருக்கு செல்லும் பக்தர்கள் உள்ளூரில் உள்ள சுற்றுலா வாகனங்களில் செல்வது வழக்கம். இந்த சவாரியை நம்பி வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் பலரது வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் வெளிமாநில வாகனங்கள் மாவட்டத்தில் இயங்குவதால், தமிழ் மாநில வாகன உரிமையாளர்கள் குடும்ப பெருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே, வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் சவாரி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி