மேலும் செய்திகள்
குடிபோதையில் தகராறு: 4 பேர் கைது
7 minutes ago
கிராம மக்களை குறிவைத்து ஏமாற்றி மோசடி
12 minutes ago
சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிேஷகம்
13 minutes ago
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சியில், மாவட்ட மருந்து வணிகர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி, செங்குட்டுவன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி தாலுகா தலைவர் பழனிவேல் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் நிதிநிலை அறிக்கை சமர்பித்தார். மாநில இணைச் செயலாளர் மதியழகன் சிறப்புரையாற்றினார். இணைச் செயலாளர்கள் வேல்முருகன், வெங்கடேசன், உளுந்துார்பேட்டை தாலுகா தலைவர் மோகன், சுரேஷ்குமார், சங்கராபுரம் சங்கர், சின்னசேலம் நடராஜன், திருக்கோவிலுார் விவேகானந்தன், கல்வராயன்மலை சரவணன், வாணாபுரம் துரை ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 21ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்துவது. ஜி.எஸ்.டி., குறைத்து வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் நல்லது செய்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கரூர் அரசியல் பிரசார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேர், தலைநகர் கார் வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த 13 பேர், ஜம்மு காவல் நிலையத்தில் வெடி விபத்தில் இற்த 9 பேர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி தாலுகா செயலாளர் நவநீதராஜ் நன்றி கூறினார்.
7 minutes ago
12 minutes ago
13 minutes ago