உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.டி.ஓ., - பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

ஆர்.டி.ஓ., - பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., வாக லாவண்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்த ராஜசேகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, விழுப்புரத்தில் பயிற்சி துணை கலெக்டராக பணிபுரிந்த லாவண்யா கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பி.ஆர்.ஓ.,

கள்ளக்குறிச்சி மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்து வந்த சரவணன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அரியலுார் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பிரபாகரன், பணி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டார். இவர் கள்ளக்குறிச்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை