உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் இளம்பெண் நீதிபதியாக தேர்வு

திருக்கோவிலுாரில் இளம்பெண் நீதிபதியாக தேர்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பெண் வழக்கறிஞர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், தெப்பக்குள தெருவைச் சேர்ந்த அலாவுதீன் மகள் அனிஸ் பாத்திமா, 24; தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பி.ஏ., எல்.எல்.பி., பட்டதாரியான இவருக்கு சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இவர் திருக்கோவிலுார் பகுதியில் முதல் பெண் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி