உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

 ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. இதேபோல், தச்சூர் கிராமத்தில் உள்ள அபிராமி அன்னை உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் சிவன் கோவிலில், சாமியார் மடம் சொம்பொற்ஜோதிநாதர் கோவில், காய்கறி மார்க்கெட் கற்பக வியாநகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. மேலும் கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர் கோவில், விருகாவூர் சீனுவாச பெருமாள் கோவில், நீலமங்கலம் சீதா லட்சுமண அனுமன் சமேத கோதண்டராமர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் நடந்த வழிபாட்டில் பக்தர்கள் பலர் குடும்பத்துடன் சென்று வழிபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஆற்காடு லுத்தரன் திருச்சபை, பெதஸ்தே ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12:00 மணியளவில் இருந்து சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 4:15 மணிக்கு நித்திய பூஜை, தனுர் மாத பூஜை, 5:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி சொர்க்கவாசல் வழியாக ஏகாதசி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுதும் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை