உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் மணிவண்ணன், திருஞானசம்பந்தம், ரவி வாழ்த்திப் பேசினர். கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் சக்தி பிருந்தா வாழ்த்திப் பேசினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.தலைமை விருந்தினர் டி.எஸ்.பி., ரமேஷ், மாணவர்கள் படிக்கின்ற காலத்தை சிறப்பாக பயன்படுத்தி, நன்றாக படித்து திறமையானவர்களாக பணிக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பேசினார். முன்னதாக மாணவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கல்லுாரி துணை முதல்வர் ஜான் விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை