மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
21 hour(s) ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்' பட்டம் இதழின் வினாடி - வினா போட்டி நடந்தது.ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்' பட்டம் இதழ் மற்றும் ஆச்சாரியா கல்விக்குழுமம் சார்பில் பதில் சொல் அமெரிக்கா செல் என்ற வினாடி - வினா போட்டி நடந்தது. போட்டியில் 50 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், அதில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது.போட்டிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வளர்மதி (மேல்நிலை), உமாராணி (உயர்நிலை) முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்றார்.போட்டியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் பாரதி பிரபாகரன், ஹரிபிரசான் அணி முதலிடத்தையும், பிளஸ் 2 மாணவி கீர்த்தனா, பிளஸ் 1 மாணவி இமயா அணி இரண்டாமிடத்தையும் பிடித்தது.வெற்றி பெற்ற இரண்டு அணிகளுக்கும், பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜா சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயத்தை வழங்கி பாராட்டினார்.போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பா.ம.க., ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
20 hour(s) ago
21 hour(s) ago