உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

கள்ளக்குறிச்சி : சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் லெனின்குமார். சித்தலுார் கோவில் திருவிழாவில் நடந்த தகராறில் சம்மந்தப்பட்ட இவரை, நேற்று முன்தினம் வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,35; கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது, வரஞ்சரத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லட்சுமணன்,26; மற்றும் அப்பு,27; ஆகியோர் முன்விரோதம் காரணமாக லெனின்குமாரை தாக்க முயன்றனர். அதை தடுத்த சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை இருவரும் பணியை செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, லட்சுமணன், அப்பு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை