| ADDED : டிச 01, 2025 05:10 AM
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணத்தை பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுார் அடுத்த ஆனைவாரி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தான் மகன் ஐயப்பன், 35; இவர் மடப்பட்டி உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். கடந்த 24ம் தேதி காலை 11:௦௦ மணி அளவில் பெட்ரோல் பங்கிற்கு பைக்கில் வந்த இருவர் பாட்டிலில் டீசல் போட வேண்டும் என கூறினர். ஊழியர் பாட்டிலை வாங்கி, டீசல் போடும்போது திடீரென பைக்கில் வந்த நபர்கள், ஐயப்பன் கையில் வைத்திருந்த ரூ. 2, 850 பணத்தை பறித்துக்கொண்டுத் தப்பி யோடி தலைமறைவாகினர். ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர் இருவரையும் தேடி வந்தனர். இருவரையும் கண்டுபிடிக்க டி.எஸ்.பி., அசோகன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில், மணிகண்ட பெருமாள், அசோக்குமார் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்தனர். அப்போது கடலுார் அடுத்த தோட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஸ்வரன், 23; கடலுார் அடுத்த வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.